சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ்குந்த்ரா. பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். திடீரென ராஜ்குந்த்ரா மீது பயங்கரமான குற்றச்சாட்டு கிளம்பியது. மாடல் நடிகைகளை நிர்வாண படங்களில் நடிக்க வைத்து வீடியோ படம் எடுத்து வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இது திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பிறகு அவர் வெளி உலகத்தில் நடமாடவில்லை. இப்போது திடீரென என் கதையை சினிமாவாக எடுத்துள்ளேன். எனது வலியை பாருங்கள் என்று கூறியுள்ளார். 'யூடி 69' என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். நீண்டநாட்களுக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்குந்த்ரா இதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “என் மீதான நிர்வாண பட வழக்கு குடும்பத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கைதான பிறகு சமூக வலைதளத்தில் என்னை கொடூரமாக டிரோல் செய்தார்கள். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. எனது வாழ்க்கை ஒரு குழப்பமான நிலையில் அர்த்தமற்றதாக மாறிவிட்டது. நான் அனுபவித்த வேதனையின் ஒரு பகுதியை மட்டுமே இந்த படத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது'' என்றார்.