'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கங்கனா நடிப்பில் வருகிற 27ம் தேதி வெளிவர இருக்கும் படம் 'தேஜஸ்'. இதனை சர்வேஷ் மெஹ்ரா இயக்கி உள்ளார். ரோணி ஸ்குரூவாலா தயாரித்துளளார். கங்கனாவுடன் அன்சுல் சவுதான், வருண் மித்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கங்கனா விமான படை பைலட்டாக நடித்துள்ளார். அவர் பணியாற்றும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்திவிட அவர் எப்படி செயல்பட்டு பிணை கைதிகளை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
படம் பற்றி கங்கனா கூறும்போது, “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்கினால் சோம்பேறிகளையும் பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒழுக்கத்தையும் வளர்க்க முடியும். அதைத்தான் இந்த படத்தில் வலியுறுத்துகிறோம். வீரர்களை எல்லையில் சண்டையிடும் நேரத்தில், நாட்டு மக்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் பேசும்போதும், அவர்களைக் குறை கூறும்போதும் ஒரு ராணுவ வீரர் எப்படி உணர்கிறார் என்பதை இப்படம் காட்டும். இந்திய ராணுவத்தின் வீரத்தை மட்டுமல்ல, அது சந்திக்கும் பிரச்சினைகளையும் இந்த படம் பேசுகிறது" என்கிறார்.