கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
கடந்த இரண்டு வருடங்களில் புட்டபொம்மா, அரபிக்குத்து பாடல்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வசீகரித்தாலும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கடந்த வருடம் தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் ஹிந்தியில் சர்க்கஸ் என விதவிதமாக அவர் நடித்த படங்கள் வெளியானாலும் இந்த நான்கு படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் சல்மான்கானுடன் இந்தியில் அவர் நடித்த கிஷிகா பாய் கிஷிகி ஜான் படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை இதன் படபிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், “பூஜா ஹெக்டேவை இந்த படத்தின் கதாநாயகியாக வரவேற்பதற்கும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.