சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான படம் 'ஜவான்'. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இப்படம் உலக அளவில் 953 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இன்றைய ஞாயிறு வசூலுடன் இப்படம் வெளியான 18 நாட்களில் இந்தியாவில் ஹிந்தி மொழி வசூலில் மட்டும் 500 கோடி வசூலைக் கடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மிகக் குறைந்த நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு இதே ஆண்டில் வெளிவந்த ஷாரூக்கான் நடித்த 'பதான்' படம் 28 நாட்களில் 500 கோடி வசூல் சாதனையைப் படைத்தது. அதற்குப் பிறகு வெளிவந்த 'கடார் 2' ஹிந்திப் படம் 24 நாட்களில் 500 கோடி வசூலித்து 'பதான்' சாதனையை முறியடித்தது.
ஒரே வருடத்தில் ஷாரூக்கானின் இரண்டு படங்கள் 500 கோடி வசூல் என்ற சாதனையைப் புரிந்துள்ளது. ஹிந்தியில் இந்த ஆண்டில் மட்டும் மூன்று படங்கள் 500 கோடி வசூல் என்ற சாதனையைப் புரிவது பாலிவுட்டினருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
'பாகுபலி 2' படம் 34 நாட்களில் 500 கோடி சாதனை என்பதைப் படைத்த போது ஒரு டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என்று பாலிவுட்டினர் மிரண்டு போனார்கள். மீண்டும் நேரடி ஹிந்திப் படங்கள் புதிய சாதனையைப் படைப்பதால் அவர்கள் தற்போதைக்கு தென்னிந்தியப் படங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளார்கள்.