காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன், ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பிறகு தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தில் சீதையாக நடித்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கிர்த்தி சனோன் நடிப்பில் வரும் அக் 20ஆம் தேதி கணபத் என்கிற படம் வெளியாக இருக்கிறது. சூப்பர் 30 மற்றும் ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமான குட்பை ஆகிய படங்களை இயக்கிய விகாஸ் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது
இது ஒருபக்கம் இருக்க கிர்த்தி சனோனின் சகோதரி நூபுர் சனோன் தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ள டைகர் நாகேஸ்வரராவ் என்கிற படமும் அதே அக்டோபர் 20ஆம் தேதியில் தான் வெளியாகிறது. ரவிதேஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இந்தப் படமும் பான் இந்தியா ரிலீஸாகத்தான் வெளியாகிறது. இப்படி சகோதரிகள் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ஆச்சரியமான நிகழ்வு தான். இதற்கு முன்னதாக நடிகைகள் அம்பிகா, ராதா சகோதரிகளின் படங்கள் மட்டுமே இதேபோன்று ஒரே நாளில் அதுவும் பலமுறை வெளியானது குறிப்பிடத்தக்கது.