நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். மும்பை போலீஸ், காயங்குளம் கொச்சுன்னி, சல்யூட் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இவர் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ மற்றும் தமிழில் ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த 36 வயதினிலே ஆகிய படங்களையும் இயக்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான சாட்டர்டே நைட் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ரோஷன் ஆண்ட்ரூஸ், நடிகர் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு கோய் சாக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார்.