ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மேற்கு வங்க இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு விரேஷ் ஸ்ரீவல்சா மற்றும் பிஷக் ஜோதி ஆகிய இருவர் இசையமைத்திருந்தனர்.
இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. படத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றங்கள் படத்தை தடை செய்ய மறுத்து விட்டது.
தமிழகத்தில் இந்தப்படம் திரையிடப்பட்டு புக்கிங் எல்லாம் நடைபெற்ற நிலையில் படம் வெளியாகாது என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். படத்தை தமிழக அரசு நேரடியாக தடை செய்யாவிட்டாலும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாக படத்தை திரையிட மறுத்ததாக காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில அரசு படத்தை தடை செய்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது “வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.” என்றார்.