டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் யஷ் சோப்ரா. இவரது மனைவி பமீலா சோப்ரா. 74 வயதான பமீலா சோப்ரா பாடகி, எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல யஷ் ராஜ் திரைப்படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பமீலா சோப்ரா கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பமீலா சோப்ராவின் மரணத்தையொட்டி சல்மான்கான் நேற்று தான் ஏற்பாடு செய்திருந்த 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்தார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இது தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக் ஆகும். யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சல்மான்கான் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.