கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் | சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி | முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா அல்லு அர்ஜுன்? - டாக்டரின் கருத்தால் பரபரப்பு |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இப்போது அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தனது 16வது படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க நடிகை ஜான்வி கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் கதாநாயகியாக நடிக்க சம்மந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.