ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராகவே நடித்து வருபவர் மம்முட்டி. அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தில் இருந்து அவரது மகன் துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக அருகில் அறிமுகமாகி தந்தையை போலவே தென்னிந்திய அளவில் பிரபல ஹீரோவாக வெற்றிநடை போட்டு வருகிறார். பாலிவுட்டிலும் கூட நுழைந்து விட்டார். இதை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியின் சகோதரர் மகன் மக்பூல் சல்மான் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல மம்முட்டியின் சகோதரி மகனான அஸ்கர் சவுதன் என்பவர் ஆரம்பத்தில் சீரியல்களில் அறிமுகமாகி அதன்பிறகு சினிமாவில் நுழைந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் தேடி வரவில்லை. இந்த நிலையில் சுரேஷ் பாபு என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் டிஎன்ஏ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஸ்கர் சவுதன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. காரணம் இளம் வயதில் மம்முட்டி எப்படி இருப்பாரோ அதேபோன்ற தோற்றத்தில் காணப்படுகிறார் அஸ்கர் சவுதன்.
மேலும் இந்த படத்தில் நடிப்பது குறித்து மம்முட்டியிடம் தெரிவித்து ஆசீர்வாதம் வாங்க சென்றபோது அவரிடம், டிஎன்ஏ என்றால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் மம்முட்டி. அதற்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்த அஸ்கரிடம் டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட் என அதன் உயிரியல் பெயரை கூற, திகைத்து போய்விட்டாராம் அஸ்கர். ஆனால் படத்தின் டைட்டிலான டிஎன்ஏவுக்கு இதுதான் விளக்கமா என்பது தான் தெரியவில்லை.