அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தற்போது நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படங்கள் எல்லாமே பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. அந்தவகையில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதி புருஷ் திரைப்படம் புராண கால படமாக அதே சமயம் நவீனத்துவத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் சீதாவாக கீர்த்தி சனானும் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோதே இதில் இடம் பெற்றுள்ள ராவணன் மற்றும் அனுமன் ஆகியோரின் கதாபாத்திர தோற்றங்களும் ஆடை வடிவமைப்புகளும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகின.
இதுகுறித்து ராமாயண காவியத்தை களங்கப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து, சமீபத்தில் ஆதிபுருஷ் படக்குழுவினர் தேவையான மாற்றங்களை செய்வதாக கூறிய பிறகு தான் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு ஆதி புருஷ் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. தற்போது மும்பையைச் சேர்ந்த சஞ்சய் திவாரி என்பவர் இந்த போஸ்டர் குறித்து மும்பையில் உள்ள சகினகா காவல் நிலையத்தில் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆசிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் மூலமாக புகார் அளித்துள்ளார்.
இந்த போஸ்டர் ராமன் மற்றும் அனுமன் ஆகியோரை தவறான உருவத்தோற்றத்தில் சித்தரிப்பதாக கூறி இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. இந்த படம் வெளி வருவதற்கு முன்பாகவே இவ்வளவு புகார்களையும் பிரச்னைகளையும் சந்தித்து வரும் நிலையில் படம் வெளியானால் இன்னும் என்னென்ன பிரச்னைகள் எல்லாம் வருமோ என படக்குழுவினர் கவலையில் இருக்கின்றன.