கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா | அபிஷேக் பச்சன் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்படுத்திய குழப்பம் ; தெளிவுபடுத்திய நிறுவனம் | காவாலா பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை ; தமன்னா வருத்தம் | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் என்ட்ரி கொடுக்கும் சாய் ரித்து | மாற்றி மாற்றி பேசும் கோபி : கடுப்பான ரசிகர்கள் |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போதும் நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு முத்தம் கொடுத்தார்.
பொது மேடையில் நடந்த இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாகவும் இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் பல போராட்டங்கள் நடந்தது. ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்த வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஷில்பாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.