புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
5 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம், பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்சின் 50வது படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானும், தீபிகா படுகோனும் இணைந்து நடித்துள்ள படம். சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கிய படம். இப்படி பல வழிகளில் கவனம் பெற்ற பதான் படம் முன்பதிவில் அதிரடி சாதனை படைத்து வருகிறது.
வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி ஜரூராக நடந்து வருகிறது. டில்லியில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் 2,200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மும்பையில் 200 ரூபாய்க்கு தொடங்கி 1450 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மும்பையில் சில திரையரங்குகள் ஒரு நாளைக்கு 15 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
250 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஓடிடி உரிமம் மட்டும் 100 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மற்ற உரிமங்கள், முன்பதிவு வசூல் இவற்றின் மூலமே படத்தின் தயாரிப்பு செலவு மீட்கப்பட்டுவிடும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.