டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஒரு நேரடி ஹிந்திப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்பதிவில் முன்னேறி வருவதைப் பார்த்து பாலிவுட்டினர் பெருமைப்பட்டு வருகிறார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் பதான் படம் அடுத்த வாரம் ஜனவரி 25ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் ஆரம்பமாகி உள்ளது. ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த ஒரு படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியாவதால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். எனவே, படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருவதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பதிவு மூலமாக மட்டுமே சுமார் 10 கோடி வரை வசூலாகிவிட்டது என்கிறார்கள். படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதால் முன்பதிவு வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய டப்பிங் படங்கள் நேரடி பாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு கடந்த வருடம் வசூலைக் குவித்தது. மேலும், இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான நான்கு முக்கிய தென்னிந்தியப் படங்கள் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. எனவே, 'பதான்' படம் பாலிவுட்டின் இந்த ஆண்டு வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்கும் என்று நம்புகிறார்கள்.