''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சோட், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை மாவட்டத்தில் ஆதிவாசி கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கோயில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் தனக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று தனக்காக கட்டியுள்ள கோவிலை பார்ப்பதற்காக சோனு சூட் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்துடன் அழைத்து சென்றார்கள். அங்குள்ள செல்பிதாண்டா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்குள் சென்று தனது சிலையை பார்த்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அதோடு நான் கடவுள் இல்லை, உங்களை போன்று ஒரு மனிதன் தான். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்து தர நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.