ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நிகழ்ந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக வைத்து எமெர்ஜென்சி என்ற பெயரில் படம் இயக்கி, அதில் இந்திரா வேடத்தில் நடித்தும் வருகிறார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கங்கனா கூறுகையில், ‛‛எமெர்ஜென்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என் வாழ்வில் பெருமையான தருணம் இது. இருந்தாலும் இந்த படம் துவங்கிய சமயத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் இந்த படத்திற்காக என் மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன். இதை முன்பே சொன்னால் சிலர் கவலைப்படுவார்கள். என்னை வெறுப்பவர்கள் மகிழ்வர். நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. இப்போது சொல்ல காரணம் உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக உள்ளேன்'' என்றார்.