ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அப்பாவானார், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விவேக் ஓபராய். இவருக்கும் ப்ரியங்கா ஆல்வாக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ப்ரியங்காவுக்கு இன்று(06.012.13) அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது டுவிட்டரில் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் விவேக் ஓபராய்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தநாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், ரொம்பவும் விஷேசமான நாள், நானும், எனது மனைவியும் எங்களது பையனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். பையன் ரொம்ப அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறான். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சாத்தியா, மஸ்தி, ஓம்காரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விவேக் ஓபராய் சில படங்களின் சறுக்கல்களுக்கு பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடித்துள்ள ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி வருகிற பிப்-15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.