ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு, கல்யாண ராசி, நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. திருமணம் முடிந்த கையுடன், விருதுகளை வாங்கி குவித்து வருகிறார், அவர். சமீபத்தில், 58வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா, மும்பையில் கோலாகலமாக நடந்தது. இதில், சிறந்த நடிகை விருது, "கஹானி என்ற படத்தில், கர்ப்பிணி வேடத்தில் நடித்ததற்காக, வித்யா பாலனுக்கு கிடைத்தது. முகம் கொள்ளாத சந்தோஷத்துடன் விருதை வாங்கிய வித்யா, மேடையில் நின்றிருந்த, மாஜி
ஹீரோயின், ரேகாவின் காலைத் தொட்டு, ஆசிர்வாதம் வாங்கியது, யாரும் எதிர்பார்க்காத சென்டிமென்ட் டச். சிறந்த நடிகர் விருது, "பர்பி படத்தில் நடித்ததற்காக, ரண்பீர் கபூருக்கு கிடைத்தது. சிறந்த படத்துக்கான விருதையும், "பர்பி தட்டிச் சென்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது, மறைந்த பாலிவுட் ஜாம்பவான், யஷ்ராஜ் சோப்ராவுக்கு அறிவிக்கப்பட்டது.