2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் வெள்ளாவி பொண்ணாக அறிமுகமான டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகை. அதோடு படங்களும் தயாரிக்கிறார். இதற்காக அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் பிளர் என்ற படத்தை தயாரித்து முடித்துள்ளார். இதில் அவரே நடித்துள்ளார். அடுத்து சமந்தா நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து அவர் 'தக் தக்' என்ற படத்தையும் வயாகாம்18 ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இது 4 பெண்களை மையமாகக் கொண்ட கதை. தருண் துடேஜா இயக்கும் இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங் ஆகிய 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். நடிக்கின்றனர். இது 4 பெண்களின் சாகச பயணக் கதை.