மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. கன்னடத்தில் உருவான இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
ஹிந்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் அங்கு தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது. ஏற்கெனவே 'டங்கல்' படத்தின் வசூலை முறியடித்திருந்த இந்தப் படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. நேரடி ஹிந்திப் படங்களே 400 கோடி வசூலைத் தாண்டாத நிலையில் 'பாகுபலி 2, கேஜிஎப் 2' ஆகிய படங்கள் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளது.
தெலுங்குப் படம் மட்டும் சாதிக்க வேண்டுமா, கன்னடப் படமும் சாதிக்கலாம் என 'கேஜிஎப் 2' குழு ஒரு புதிய உண்மையை இந்தியத் திரையுலகத்திற்கு உணர்த்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சில புதிய ஹிந்திப் படங்கள் வெளிவந்தாலும் 'கேஜிஎப் 2' படத்தின் ஓட்டத்தை எந்தப் படத்தாலும் தடுக்க முடியவில்லை.