''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ஓடிடி தளத்தில் கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி லாக்கப். ஜெயில் செட்டப்பில் போட்டியாளர்களை கைதிகளை போல் உள்ளே அனுப்பி அவர்கள் எப்படி சர்வைவ் பண்ணுகின்றனர் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். பூனம் பாண்டே முதல் முன்னணி நடிகர்களின் மனைவிகள் வரை கலந்து கொண்டு மனம் விட்டு பேசினார்கள். சிலர் தங்கள் பாலியல் உறவு குறித்து பேசியதும் சர்ச்சை ஆனது.
இதன் இறுதி சுற்றில் ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் பரூக் கோப்பையை வென்றார். ரசிகர்கள் அதிக அளவில் வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்தனர். பருக்கிற்கு 20 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், ஏக்தா கபூர் இயக்கும் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பும் பரிசாக வழங்கப்பட்டது. பரூக்கை கங்கனா கட்டி அணித்து ஆரத் தழுவி கோப்பையை வழங்கினார்.