பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரை போன்றே அச்சு அசலான தோற்றம் கொண்ட இப்ராஹிம் காதரி என்பவர் சுற்றி வருகிறார். அவரை ஷாருக்கான் என்று நம்பி ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவரது சமூக வலைத்தளங்களை பின்பற்றுகிறார்கள். பொது இடங்களில் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு துரத்துகிறார்கள்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : தோற்றதுக்காக அதிகம் மெனக்கெடுபவன் அல்ல நான். ஆனால் நண்பர்களும், குடும்பத்தினரும் 'நீ ஷாருக்கான் மாதிரி இருக்கே' என்று கூறியே வளர்த்தனர். ஆனால் வளர்ந்த பிறகுதான் நான் அவரைப்போன்று இருப்பதை உணர்ந்தேன். நான் இப்படி இருப்பதில் என் பெற்றோருக்கு பெருமை. ஆனால் என்னால் பொது இடங்களுக்கு செல்ல முடியவில்லை. விரும்பியபடி வாழ முடியவில்லை. ஹீரோவாக இருப்பது கஷ்டமில்லை. ஹீரோ மாதிரி இருப்பதுதான் கஷ்டம் என்கிறார் இப்ராஹிம்.