அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் 'தடம்' . இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார் . தன்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் தெலுங்கில் ராம் பொத்தினேனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் 'ரெட்' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இந்நிலையில் தடம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வர்தன் கேட்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.