சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஐபில் கிரிக்கெட் போட்டியின் கோல்கட்ட நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் உலகத் தரம் வாய்ந்த 20 ஓவர் கிரிகெட்டுக்கென்றே பிரத்யேகமாக மைதானம் ஒன்றை கட்டுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் எங்களுக்கும், எம்.எல்.சி.க்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக உள்ளது. இது உலகின் மிகச்சிறந்த பெருநகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்சிலும், கிரிக்கெட்டிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்காவில் எம்எல்சியில் எங்களது முதலீடு, அமெரிக்க கிரிக்கெட்டின் அற்புதமான எதிர்காலம் குறித்த எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டை உலகளாவிய பிராண்டாக நிலைநிறுத்துவதற்கான முயற்சி இது. என்கிறார் ஷாருக்கான்.
பொதுவாக அமெரிக்கர்களுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்காது. அவர்களை கிரிக்கெட்டை நோக்கி திருப்பும் முயற்சி இது என்கிறார்கள். இந்த ஸ்டேடியம் 15 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்படுகிறது.