குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் இன்று (பிப்.,16) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. உடல்நல பிரச்னையால் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹிரி, கடந்த திங்கள் அன்று வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவர்கள் வீட்டில் வந்து பார்த்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பல்வேறு உடல் உபாதைகளால் பப்பி அவதிப்பட்டு வந்தார்.
1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தியாவில் டிஸ்கோ பாடல்கள் பிரபலமானதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். அதனாலயே இவரை இந்தியாவின் டிஸ்கோ இசை ஜாம்பவான் என அழைத்தனர்.