தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருக்கு இளம் வயதில் ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். கடந்த வருடம் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலப் போட்டியில் ஷாரூக்கானுக்குச் சொந்தமான கோல்கட்டா அணி சார்பாக ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான் கலந்து கொண்டனர். ஷாரூக்கான் மகன் ஆர்யன் எப்போது சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், மகள் சுஹானா கான் விரைவில் நடிகையாக உள்ளார். சோயா அக்தர் இயக்க உள்ள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறார் சுஹானா.
பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்கோத்ரா நேற்று அவருடைய சமூகவலைதளத்தில் அவர் டிசைன் செய்த புடவையில் சுஹானா இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். பாலிவுட் நாயகிகளுக்குரிய தோற்றத்தில் இருக்கும் சுஹானாவை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளார்கள். சிவப்பு நிறப் புடவையில் சொக்க வைக்கும் அழகில் ஜொலிக்கிறார் சுஹானா.