‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆளு படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கியதால் கடைசி வரைக்கும் மீதமுள்ள பாட்டுக்கு ஆட வராமல் சாதித்து விட்டார் ஒன்பதுதாரா. தாடி டாடி தயாரிப்பாளர் சங்கம் வரைக்கும் முறையிட்டும் ஒன்பதுதாரா பக்கம் தான் நியாயம் இருக்கிறதுன்னு சொல்லி சங்கமும் கைவிரிச்சிடுச்சி. இதனால் கடுப்பான வம்பு நடிகரும், தாடி டாடியும் படத்தின் புரமோசன்களில் ஒன்பதுதாராவை ஓரங்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருக்கும் இன்னொரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. தற்போது மீடியாக்களுக்கு அனுப்பும் படங்களில் ஒன்றில்கூட ஒன்பதுதாரா இல்லை. ஒன்பது தாரா ஆளு படத்தையே மறந்து விட்டார் என்பது வம்புக்கும், தாடி டாடிக்கும் தெரிமான்னு தெரியலை.