ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
அமலாபால் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்குற லந்துதான் இப்போ ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டிருக்கு. யார் கூட வேணாலும் நடிக்கத் தயார் சம்பளம் 75 லட்சம் வேணும். அதிக பட்சம் 30 நாள்தான் கால்ஷீட். என்கிறாராம். அட இதுகூட பரவாயில்லையாம் அவரோட மேக்அப் மேனுக்கு 30 நாளைக்கும் சேர்த்து 9 லட்சம் சம்பளமாக கொடுத்திடனுமாம். கம்பெனி தனியா மேக்அப் மேன் வச்சாலும் இவருக்கான மொய்யை எழுதிடனுமாம். அப்புறம் மேக்அப் அயிட்டம் எல்லாமே இறக்குமதி சரக்காத்தான் இருக்கணுமாம்.
அவருடன் மூன்று உதவியார்கள் வருவார்களாம். அவர்களுக்கு தினசரி பேட்டா ஆளுக்கு 5 ஆயிரம். விமான பயணம் என்றால் இத்தனை பேருக்கும் முதல் வகுப்பில் டிக்கெட் போடணும். கிட்டத்தட்ட அமலாபால் ஹீரோயினா நடிக்கிற படத்துக்கு அவருக்கு மட்டும் ஆகுறு செலவு சம்பளத்தையும் சேர்த்து ஒரு கோடி ரூபாயாம். இதையெல்லாம் இப்போ அவர் நடிச்சிட்டிருக்குற படத்தோட புரொடக்ஷன் மானேஜர் புலம்பினது. "வீரசேகரன் படத்துல நடிக்கிறப்போ சைதாப்பேட்டை கவர்மெண்ட் குவார்ட்டர்சுலதான் ஷூட்டிங். பத்த நாளும் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாங்க. நான்தான் தினமும ரெண்டு கொசுவர்த்தி சுருள் வாங்கி கொண்டு கொடுப்பேன்" இப்படிச் சொன்னதும் அதே மானேஜர்தான்.