மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படங்களில் ஒன்றான சிவாஜி இன்று(12.12.12) முதல் அவர் ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் பரிசாக 3டி தொழில்நுட்டபத்தில் வெளிவருகிறது. அது பற்றிய ஒரு கண்ணோட்டம்.
* சிவாஜியை 3டி தொழில்நுட்பத்திற்கு மாற்ற 18 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 2 வருடங்களாக 400 கம்ப்யூட்டர் நிபுணர்கள் தினமும் மூன்று ஷிப்டுகளாக பணியாற்றி இதை உருவாக்கி உள்ளனர்.
* படத்தை முன்பை விட விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 3 மணி 10 நிமிடமாக இருந்த படத்தின் நீளத்தை 2 மணி 30 நிமிடமாக குறைத்துள்ளனர். குறிப்பாக ஸ்ரேயா வேலை செய்யும் மியூசிக் கடை சண்டை காட்சி நீக்கப்பட்டுள்ளது. சாலமன் பாப்பையா பகுதியான "வாங்க பழகலாம்" பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து சண்டைக் காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
* பாடல் காட்சிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் 3டியில் மிரட்டலாக இருக்கிறது. ரஜினியின் கண்கள்கூட நடிப்பதை மிக அருகில் பார்க்க முடிகிறது.
*ரஜினி தூக்கி எறியும் மலர், ஆப்பிள் நம்மீது வந்து விழுவது போன்ற பிரமிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் பறக்கும் ரூபாய் நோட்டுகள் தியேட்டர் முழுவதும் பரவும் பிரமிப்பும் 3டி வழங்கிய கொடை.
*மொட்டை பாசுக்கு மொத்தம் மூன்றே காட்சிகள்தான். ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவார். அடுத்து மேடையில் பேசுவார், பிறகு கிளைமாக்ஸ் சண்டைக்கு போய்விடுவார். பரபரவென செல்லும் மொட்டை பாஸ் பகுதி.
*ஸ்ரேயாவின் மொத்த அழகையும் பக்கத்தில் வைத்து பார்க்கும் அனுபவம் அலாதியானதாக இருக்கும்.
* பட...பட... ஸ்டைல் பாட்டு ஒன்ஸ் மோர் கேட்க வைக்கும்.
* ஒரே ஒரு குறையும் உண்டு. ரஜினியின் குளோஸ்-அப் காட்சிகளில் அவர் போட்டிருக்கும் மேக்-அப் தூக்கலாகத் தெரியும்.
* மற்றபடி சிவாஜிராவ் தன் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு இந்த சிவாஜி என்பது 100 சதவிகிதம் உண்மையானது.