விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

2018ம் ஆண்டில் பல திரையுலக பிரபலங்கள் இல்லற வாழ்வில் இணைந்தனர். முக்கிய நட்சத்திரங்களின் திருமணம் வருமாறு...
ஜன., 22 - தன் வாழ்க்கையில் பெரும் பிரச்சினை ஒன்றை சந்தித்த நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
மார்., 4 - நடிகர் கதிர் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சனாவை திருமணம் செய்துகொண்டார்.
மார்., 4 - குணசித்திர நடிகரான ரமேஷ் திலக், ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் செய்தார்.
மார்., 8 - பார்த்திபன் மகளும் நடிகையுமான கீர்த்தனா காதலன் அக்ஷய்யை மணந்தார்.
மார்., 12 - நடிகை ஸ்ரேயா டென்னிஸ் வீரர் ஆண்ரிகோச்சை மணந்தார்.
மார்., 19 - நடிகர் அசோக் திருமணம்
மார்., 26 - பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் முண்டாசுப்பட்டி ராம்தாஸ், உறவுப்பெண் தேன்மொழியை திருமணம் செய்தார்.
ஏப்., 12 - சேதுபூமி, விலம் அம்பு படங்களில் நடித்த நடிகை சமஸ்கிருதி, கேரள தொழிலதிபர் விஷ்ணு நாயரை திருமணம் செய்தார்.
ஏப்., 18 - சதுரங்கவேட்டை புகழ் இஷாரா நாயர் துபாய் தொழில் அதிபர் சாஹிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏப்., 21 - பாலிவுட் படங்களில் நடித்தவரும், தமிழில் பையா போன்ற படங்களில் வில்லனாக நடித்த நடிகர் மிலிந்த் சோப்ரா, இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மே 2 - நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திருமணம் நடந்தது.
மே 6 - பாடகி மானசி, டாக்டர் அபினேஷ் விஜயகுமாரை திருமணம் செய்தார்.
மே 25 - பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்த நடிகர் சவுந்தர்ராஜா, தமன்னாவை திருமணம் செய்தார்.
ஜூன் 4 - தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணா, வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
ஆக., 30 - சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சுவாதி, விமான பைலட் விகாஸை திருமணம் செய்தார்.
அக்., 22 - பாடகி வைக்கம் விஜயலட்சுமியை மிமிக்ரி கலைஞர் அனூப் திருமணம் செய்து கொண்டார்.
நவ., 19 - நடிகை சுஜா வாருணி நடிகர் சிவாஜி தேவ் என்ற சிவகுமாரை (சிவாஜி பேரனும், ஸ்ரீபிரியாவின் அக்கா மகன்) திருமணம் செய்தார்.
டிச., 12 - நடிகை சாந்தினி, நடன இயக்குநர் நந்தாவை திருமணம் செய்தார்.