நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்
06 நவ, 2018 - 11:19 IST
இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள், விதவிதமான உணடுகளுடன் பட்டாசு மற்றும் புத்தம் புது படங்களும் கொண்டாட்டமாக இருக்கும். தீபாவளி பண்டிகையை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். திரைப்பிரபலங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம்...
ஜோதிகா
போன வருடம் புது வீடுபோய் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினோம். அந்த தீபாவளி எங்களுக்கு மறக்க முடியாத தீபாவளி. இந்த வருடம் எப போதும் போல் எங்கள் வீட்டில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சி யுடன் கொண்டாடுகிறோம்..
ஜனனி
பிக்பாஸ் நிகழ்ச்சி சமயம் நிறைய நாட்கள் குடும்பத்தை மிஸ் பண்ணிட்டேன்.. இந்த தீபாவளி எல்லாம் சேர்த்து வைத்து பெரிய கொணடாட்டமாக சென்னையில் என் குடும்பத்துடன் கொண்டாடுகிறேன்
தமன்னா
இந்த தீபாவளி, மும்பையில் உள்ள வீட்டில் தான். வீட்டில் விளக்கு வைத்து பூஜைகள் செய்வோம். நிறைய சல்வார் டிரஸ் வாங்கிருக்கேன்.. புது டிரஸ் ஸ்வீட்ஸ் என்று தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போறேன்.
நிவேதா பெத்துராஜ்
கடந்தாண்டு, என் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்துடன் துபாயில் இருந்து கோவில்பட்டி சென்று தீபாவளி கொண்டாடினோம். இந்த வருடம் அப்பாவுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. நானும், என் தம்பியும் சென்னையில் இருக்கோம். கண்ணதாசன் பேத்தி என் தோழி. எனவே அவங்க வீட்டுக்கு போய் தீபாவளி கொண்டாடுவேன். ஊசி வெடி வெடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
லஷ்மி மஞ்சு
எல்லா தீபாவளியும் என் அப்பா வீடு போய் கொண்டாடுவோம். ஆனால் இந்த முறை என் வீட்டிற்கு எல்லாரையும் வர வைத்துள்ளேன். அத்தனை சாப்பாடு வகைகளுடன் ஒரு மிரட்டலான விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். எனக்கும, என் மகளுக்கும் ஒரே கலரில் பட்டு டிரஸ் வாங்கிருக்கிறேன். இந்த தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்
ஆத்மியா
மலையாள படபிடிப்பு தென்காசியில் முடித்து, கேரளா போய் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போறேன். இந்த ஆண்டு புடவை என் ஸ்பெஷல்.
கீர்த்தி சுரேஷ்
எப்போதும் என் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் சர்க்கார் தீபாவளி ரிலீஸ் என்பதால் சென்னையில் சர்கார் தீபாவளி கொண்டாடப்போறேன்.
தன்ஷிகா
சுந்தர்.சி உடன் இருட்டு படப்பிடிப்பு சூரத்தில் முடிந்தது. தீபாவளியை சென்னையில் கொண்டாடுகிறேன். இரண்டு பட்டுபுடவை வாங்கினேன். முக்கியமாக தீபாவளி அன்று வெடி வெடிக்கனும், சர்கார் பார்க்கனும். இது தான் என் பிளான்
சாந்தினி
இந்த தீபாவளி ரொம்ப ஷ்பெஷல். நான் நடித்த பில்லா பாண்டி படம் தீபாவளிக்கு வருவதால் குடும்பத்துடன் தியேட்டர் போய் படம் பார்ப்போம்.
வேதிகா
தீபாவளி எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். அதிகாலையில் எழுந்துவிடுவேன். பூஜை எல்லாம் முடித்த பின்னர் அம்மா சமைத்து வைத்த உணவு வகைகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்வேன். இந்தாண்டு பட்டாசிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கும் வண்ணமும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்துள்ளேன்.