பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மகன் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படத்தில் லட்சுமியுடன் நடித்துள்ளார். அவரின் சிறப்பு பேட்டி:
* நடிப்பதற்கு ஏன் இத்தனை இடைவெளி?
நானாக எந்த இடைவெளியையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனக்கு வரும் வாய்ப்புகளில் எனக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நானாக சென்று வாய்ப்பு தேட முடியாதில்லையா?
* புதிய இயக்குனர்கள் உங்களை அணுகுவதற்கு தயங்குகிறார்களா?
அப்படித்தான் நினைக்கிறேன். சில நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள். புதிய இயக்குனர்கள் வித்தியாசமான சிந்தனையோடு, வித்தியாசமான கதை களத்தோடு வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்கள் என்னை அணுக தயக்கம் கொள்ளத் தேவையே இல்லை. நான் ரொம்ப சாதாரணமான ஆளு. உங்கள் கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன்னு நினைச்சா என் வீட்டு கதவை எப்போது வேண்டுமானாலும் நீங்க தட்டலாம்.
* மூணே மூணு வார்த்தையில் உங்களுக்காக கேரக்டரை மாற்றினாங்களாமே?
உண்மைதான். கதைப்படி முதலில் நானும் லட்சுமியும் ஹீரோவுக்கு அப்பா அம்மாவாக நடிப்பதாகத்தான் இருந்தது. நிஜத்தில் இருவருமே பேரப் பிள்ளைகளை பெற்று தாத்தா பாட்டியாகிவிட்டோம். அதோடு நாங்க இரண்டு பேரும் வயதான தம்பதிகளாக நடித்த தெலுங்கு படம் மிதுனம் அங்கு பெரிய ஹிட். அதானல் இதில் அப்பா என்பதை, தாத்தா பாட்டியாக மாற்றிவிட்டார்கள்.
* லட்சுமியோடு நடித்தது பற்றி?
லட்சுமியோடு நடிக்கிறது புதுசு இல்லை. ஏழெட்டு படம் வரைக்கும் நடிச்சிருக்கோம். தமிழ்ல இதுதான் முதல் முறை. அவர்கூட நடிக்கிறதுன்னா கொஞ்சம் பயம்தான். அவரோட அனுபவம் அப்படி. எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்குல ஊதி தள்ளிட்டு போயிடுவாங்க. நான் கொஞ்சம் சொதப்பினாலும் எத்தனை ரீ டேக்கிற்கும் தயங்காம வருவாங்க.
* வில்லனாக நடிக்க மறுக்குறீங்களாமே?
என்னை யாரும் வில்லன் கேரக்டருக்கு கூப்பிடுறதில்லை. ஒன்றிரண்டு படங்கள்ல நெகட்டிவ் ரோல் பண்ணினேன். என்னடா பாலு நீ போயி இப்படி நடிக்கிறேன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. பாலு இது வேணாண்டான்னு சொன்னாங்க. சார் நீங்க போயி...ன்னு ரசிகர்களும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நடிக்கிற கேரக்டரை என்னோட நிஜ கேரக்டரோட ஒப்பிட்டு பார்க்கிறதால இந்த கேள்விகள். அதனால இனி நெகட்டிவ் கேரக்டர்கள் பண்றதில்லேன்னு விட்டுவிட்டேன்.
* தொடர்ந்து நடிப்பீங்களா...?
அதிலென்ன சந்தேகம், நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். இதுவரைக்கும் 68 படங்கள்ல நடிச்சிருக்கேன். எல்லாமே என் மனசுக்கு நெருக்கமான படங்கள்தான். இன்னும் நிறைய நடிக்கணும். என் தோற்றத்துக்கும், உடம்புக்கும் ஏற்றமாதிரி கேரக்டர்கள் வந்தால் தொடர்ந்து நடிச்சிட்டிருப்பேன்.
* பாட்டு...?
இது நடிப்பை பற்றிய பேட்டின்னு சொன்னீங்க. இப்போ பாட்டை பத்தி கேட்குறீங்க. சரி... தொடர்ந்து பாடிக்கிட்டேதான் இருக்கேன். தினமும் ரிக்கார்டிங் தியேட்டர் போறேன். ஏதோ ஒரு மொழியில ஏதோ ஒரு பாட்டு எனக்காக காத்திட்டிருக்கு.
* சங்கராபுராணம், சலங்கை ஒலி மாதிரி படங்கள் வருமா?
அதெல்லாம் கடவுள் கொடுத்த வரங்கள். அதை எப்போ கொடுக்கணுங்றது கடவுளோட அனுக்கிரகத்துல வர்றது. அதை கேட்டு வாங்க முடியாது. கடவுள் முடிவு பண்ணிட்டார்னா நாளைக்கே அது கிடைக்கும்.
* பாடுவதையும், நடிப்பையும் எப்படி பார்க்குறீங்க?
என்னை பொருத்தவரை பாட்டுதான் உயிர். நடிப்பு அடுத்ததுதான். இரண்டையும் இரண்டு கண்ணுன்னும் சொல்லலாம்.முன்பு நான் பாடிக்கிட்டு மட்டும் இருக்கும்போது நான் பாடிய சில உணர்வுபூர்வமான பாட்டை சில நடிகர்கள் ஏனோதானோன்னு நடிச்சு சொதப்பி வச்சிருப்பாங்க. அப்போ அவுங்க மேல எனக்கு கோபம் வரும். ஆனால் நான் நடிக்க வந்த பிறகுதான் நான் பாடின பாட்டுக்கு நடிக்கிறது எவ்வளவு சிரமம்னு தெரிஞ்சுது. இப்ப யாரையும் கோவிச்சுக்கிறதில்லை.
* இப்போ நிறைய பாடகர் பாடகிகள் வர்றாங்களே...?
சினிமா பிளாட்பார்ம் பெருசாகியிருக்கு. நிறைய கதவுகள் திறந்திருக்கு. டெக்னாலஜி அதை செஞ்சிருக்கு. அதனால நிறைய பேர் வர்றாங்க. ஆனாலும் திறமையானவங்கதான் நிலைச்சு நிக்குறாங்க. இது ஆரோக்கியமான விஷயம்தான்.
இவ்வாறு எஸ்.பி.பி. கூறினார்.