மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |
கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நட்சத்திர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். சினிமா நடிகைகளை கிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதும், கழற்றி விடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுத்து நடத்துகிறார்கள். இதுதவிர சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் போட்டா போட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஸ்ரீகாந்த் தற்போது ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் நுழைந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ உலா என்ற படத்தில் குத்தாட்டம் ஆடியிருக்கிறார். விஷால், விஷ்னு, விதார்த், ரமணா, சாந்தனு, ஜீவா ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக இருந்து நடிகரானவர்கள்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட் பிரபு சென்னை 28 என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு சில படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்தது. ஆனால் அவைகள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் அடிப்படை விஷயம் கூட கிரிக்கெட் விளையாட்டுதான். இப்போது நான்கு படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகிக் கொண்டிருக்கிறது. அவற்றின் முன்னோட்டம் இது...
ஜீவா
வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாட்டில் இருந்த உள்ளூர் பாலிடிக்சையும், பகையையும் காட்டிய சுசீந்திரன், இப்போது கிரிக்கெட்டில் இருக்கும் சர்வதேச முறைகேடுகள், ஊழல்கள், பெட்டிங்குளை காட்டப்போகும் படம் ஜீவா. இதில் நிஜத்திலும் கிரிக்கெட் வீரரான விஷ்ணு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரன் தனக்கான இடத்தை பெற நடத்தும் போராட்டங்களும், அவமானங்களும்தான் கதை. சுசீந்திரனின் சொந்த தயாரிப்பு. இமான் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.
ஆடாம ஜெயிச்சோமடா
தில்லுமுல்லு படத்தை இயக்கிய பத்ரி இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா. இதில் கருணாகரன், சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி நடிக்கிறார்கள். இது கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய படம். ஒரு கால் டாக்ஸி டிரைவரான கருணாமூர்த்தியின் பார்வையில் கிரிக்கெட் சூதாட்டத்தை காமெடியா காட்டும் படம். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆடிய சூதாட்டத்தை மையமாக கொண்டு தயாராகி வருகிறது.
1 பால் 4 ரன் 1 விக்கெட்
அறிமுக இயக்குனர் வீரா இயக்கும் படம் 1 பந்து 4 ரன் 1 விக்கெட். கிரிகெட்டின் கிளைமாக்ஸ் பகுதியை டைட்டிலாக கொண்ட படம். இது கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய படம் அல்ல. கிரிக்கெட் பேய் படம். ஹீரோ ஒரு நாள் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தியா ஜெயிக்க 4 ரன் தேவைப்படுகிறது. கையில் இருப்பது ஒரு பந்து அதை வீரர் அடிக்கப்போகும் அந்த கடைசி விநாடியில் கிரிக்கெட்டை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு ஒரு விஷயம் நடக்கும் இப்படி போகுற கதை. கிரிக்கெட் விளையாட்டுக்குள் ஆவி புகுந்தால் எப்படி இருக்கும் என்கிற காமெடி த்ரில்லர். கவுடா என்பவர் தயாரித்திருக்கிறார், கார்த்திக் நல்லமுத்து இசை அமைக்கிறார்.
கிரிக்கெட் ஸ்கேண்டல்
திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்கும் படம் கிரிக்கெட் ஸ்கேண்டல். இது கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களை பற்றியும், கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் எடுக்கப்படுகிற துணிச்சலான படம். இதில் கிஷன் ராமச்சந்திரன் என்பவர் கிரிக்கெட் வீரராகவும். அவர் காதலிக்கும் கிளப் டான்சராக ரோஸ் வெங்கடேசனும் நடிக்கிறார்கள். செந்தில்குமார் என்பவர் தயாரிக்கிறார். தீபன் இசை அமைக்கிறார். அக்கு அஜ்மல் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.
எந்த படம் டக் அவுட் ஆகும், எந்தப் படம் செஞ்சுரி அடிக்கும் என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.