ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
2021ம் வருட தீபாவளிக்கு தியேட்டர்களில் அண்ணாத்த, எனிமி, ஆபரேஷன் ஜுஜுபி ஆகிய படங்களும், ஓடிடி தளங்களில் ஜெய் பீம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களும் வெளிவந்தன.
சூர்யா நடித்த ஜெய் பீம் படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்குப் பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுக்களும் கிடைத்தன. ஒரு உண்மைச் சம்பவத்தை திரையில் சிறப்பாகக் கொண்டு வந்ததாக பாராட்டுக்கள் கிடைத்தன. அதே சமயம் சில குறியீடுகள் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சாதி பற்றியும் தவறான சித்தரிப்புகள் படத்தில் இடம் பெற்றதாக அந்த சாதியினர் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். ஆனாலும், தீபாவளி படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு படமாக இந்தப் படம் அமைந்து தரமான படம் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் வழக்கம் போல அதிகாலைக் காட்சியிலிருந்தே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இரண்டு காட்சிகள் கடந்த பிறகு படத்தைப் பற்றி நெகட்டிவ்வான கருத்துக்கள்தான் அதிகம் பரவியது. தான் எடுத்த முந்தை படங்களின் காப்பி, வேறு சில படங்களின் காப்பி என கலந்து எடுத்துவிட்டார் சிவா என்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்தன. இருந்தாலும் ரஜினிகாந்த் தன்னுடைய மேஜிக் நடிப்பால் படத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மையாக உள்ளது. நேற்று முதல் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பதாக தற்போது தியேட்டர் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் எவ்வளவு வந்தாலும் கலெக்ஷனில் அண்ணாத்த அள்ளுவார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் கொடுக்கும் தகவலாக உள்ளது.
விஷால், ஆர்யா நடித்த எனிமி படம் இளம் சினிமா ரசிகர்களை ஓரளவிற்குக் கவர்ந்துள்ளது. ஆனாலும், படத்தில் நெகட்டிவ்வான விஷயங்கள் நிறையவே உள்ளன என்பது விமர்சகர்களின் கருத்து. நீளமான பிளாஷ்பேக்குகள், அழுத்தமில்லாத பல காட்சிகள், லிட்டில் இந்தியா ஒரே செட்டில் அதிகக் காட்சிகள், விஷால் - ஆர்யாவிடம் காணப்படாத ஏட்டிக்குப் போட்டியான நடிப்பு என பல உண்டு. இருப்பினும் அண்ணாத்த கிராமத்துக் கதையாக பி அன்ட் சி பக்கம் போய்விட எனிமி ஏ சென்டர் பக்கம் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம் என்கிறார்கள்.
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடித்த எம்ஜிஆர் மகன் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இன்னும் சில பல வருடங்களுக்கு சசிகுமார், சமுத்திரக்கனி எந்தக் கூட்டணியும் சேராமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கும் அளவிற்குப் படம் உள்ளது. இருவரும் இணைந்து நடித்த உடன்பிறப்பே படம் கடந்த மாதம்தான் வந்து சோதித்தது. ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் எம்ஜிஆர் மகன் படத்தில் இப்படியோ சோதிப்பது என ரசிகர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு தான் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த பொன்ராம் பின்னர் சீம ராஜா படத்தில் சிவகார்த்திகேயனை சறுக்க வைத்தார். அந்த சறுக்கு மரத்தில் இப்போது சசிகுமாரை இறக்கிவிட்டார்.