பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடித்து வருகிறவர் அபி நவ்யா. சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.
இவரும் ஜீ தமிழ் சேனனில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்து வரும் தீபக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். காதலுக்கு இருவரின் குடும்பத்தாரும் பச்சைகொடி காட்டியதால் கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த திருமணம் இப்போது முடிந்துள்ளது. மாங்காட்டில் நடந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.