லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சென்னை : தனது நேயர்களுக்குபொழுதுபோக்கின் மூலம் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவதே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நோக்கமாகும். இந்த வாரயிறுதி விடுமுறையை சிறப்பானதாக மாற்ற நாளை (ஜனவரி 30), மதியம் 3.30மணிக்கு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட கிரைம் திரைப்படம் - 'சித்திரை செவ்வானம்'உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.
சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சில்வா இத்திரைப்படத்தில் இயக்குனராக முதல்முறையாக களமிறங்கியுள்ளார். நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் நாயகியாக அறிமுகமான சித்திரை செவ்வானத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை-மகளான முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி)மற்றும் ஐஷ்வர்யா (பூஜா கண்ணன்) கதாப்பாத்திரங்களை சுற்றியே கதை நகர்கிறது.
மருத்துவராக வேண்டும் என்கிற தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே முத்துவின் ஒரே இலட்சியமாக உள்ளது. ஆனால் மகள் காணாமல் போக அவரது உலகமே தலைகீழாக மாறுகிறது. ஒரு விவசாயியான முத்துப்பாண்டி, தன் மகளின் நற்பெயரை கெடுக்க நினைத்த குற்றவாளிகளைஎதிர்த்து ஜெயித்து, காணாமல் போன தன் மகளையும் கண்டுபிடிக்கும் இத்திரைப்படம் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
உணர்வுபூர்வமான இந்த தந்தை மகளின் கதையைக் காண, வரும் ஜனவரி 30, மதியம் 3:30 மணிக்கு 'சித்திரை செவ்வானம்' திரைப்படத்தைஜீ தமிழ் தொலைக்காட்சியைக் காணத்தவறாதீர்கள்.