கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
சின்னத்திரை பிரபலங்களான அபிநவ்யா மற்றும் தீபக்குமாருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகும் கணவன் மனைவி இருவருமே தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். தற்போது அபிநவ்யா கயல் தொடரிலும், தீபக்குமார் விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' விலும் நடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் அபிநவ்யா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார். தொடர்ந்து அவரது வளைகாப்பு புகைப்படங்களும் இன்ஸ்டாவில் கவனம் பெற்றது.
இந்நிலையில், அபிநவ்யா தற்போது அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தீபக் மற்றும் அபிநவ்யா ஒன்றாக சேர்ந்தே குழந்தையின் புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.