'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஹிமா பிந்து. தற்போது 'இலக்கியா' என்ற தொடரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் ஹிமா பிந்து, தற்போது 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரத்தை ரீகிரியேஷன் செய்யும் கிளப்பில் இணைந்துள்ளார். குந்தவை கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குந்தவை கெட்டப் ஹீமாவுக்கு பக்காவாக பொருந்தி போவதுடன் அந்த கெட்டப்பில் அவரை சட்டென பார்க்கும் போது நடிகை த்ரிஷா மாதிரியே இருக்கிறார். சொல்லப்போனால் த்ரிஷாவுக்கு டூப் போட்ட மாதிரியே இருக்கிறார். இதனை பார்த்த ஹிமா பிந்துவின் ரசிகர்கள் அவருக்கு 'சின்னத்திரை த்ரிஷா' என பட்டமே கொடுத்துவிட்டனர்.