செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'கயல்' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், முத்துராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தவிரவும் முக்கிய கதாபாத்திரங்களின் ட்விஸ்ட் தொடரை விறுவிறுப்பாக எடுத்து செல்கிறது. அந்த வகையில் கதாநாயகி கயலின் தம்பி கதாபாத்திரமான அன்பு கதாபாத்திரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அன்பு கதாபாத்திரம் தற்போது நெகடிவ் ஷேடாக மாறிக்கொண்டியிருக்கும் சூழலில் கடந்த மாதம் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவினாஷ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அவரை தொடர்ந்து ஹரி என்பவர் அந்த ரோலில் நடித்து வந்தார். அவர் நடிக்க ஆரம்பித்து வெறும் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் அவரும் சமீபத்தில் கயல் தொடரைவிட்டு விலகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அன்பு கேரக்டரில் யூ-டியூபரான ஜீவா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை பார்த்து கடுப்பான கயல் தொடரின் ரசிகர்கள் 'ராசியில்லாத கயல் தம்பி' என டைரக்சன் டீமுக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.
'என்னடா இது கயல் சீரியலுக்கு வந்த சோதனை?'