ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்தபோது அவரை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்தனர். முறையாக விவாகரத்து பெறாத இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்து விட்டார் என்றும் வனிதா மீது குற்றம் சாட்டினர். அதையடுத்து வெகுண்டெழுந்த வனிதா, லட்சுமிராமகிருஷ்ணனை ஒரு லைவ் பேட்டியில் வாடி போடி என்று கடுமையான வார்த்தைகளால் வெளுத்து வாங்கினார்.
இதனால் தன்னை அவதூறாக பேசி விட்டதாக வனிதா மீது மானநஷ்டஈடு வழக்குத் தொடர்ந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன. அதையடுத்து தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா விஜயகுமாரும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இப்படி பல எதிர்ப்பு விமர்சனங்களுக்கு மத்தியில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டபோதிலும் நான்கே மாதங்களில் அவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரை பிரிந்தார் வனிதா.
இந்தநிலையில், சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டாருடன் நடிக்கும் பிக்கப் டிராப் படத்திற்காக மாலை மாற்றியபடி வனிதா எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகின. இந்த போட்டோவை பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒருவர் டேக் செய்தார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்களில் நீர் வரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டார். கூடவே இன்னொரு டுவீட்டில் நகைச்சுவையாக உள்ளது, ஆனால் தயவு செய்து எனக்கு டேக் செய் வேண்டாம் என பதிவிட்டார். இருப்பினும் அந்த டுவீட்டை அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் இது வைரலாகிவிட்டது.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார். அதுப்பற்றி டுவிட்டரில், ‛‛அருவருப்பான விஷப்பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன். எனது ரகசிய அபிமானியாகவும், தீவிர ரசிகையாகவும் இருந்ததற்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார்.