ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'பீஸ்ட்' படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
தெலுங்கில் கைவசம் 'மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், ஆச்சார்யா, ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் பூஜா நடித்து அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அங்கு தற்போதைக்கு இவர் தான் நம்பர் 1 கதாநாயகியாக இருக்கிறார். மேலும், அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
சமீபத்தில் முன்னணி தெலுங்கு நிறுவனம் ஒன்று அவர்களது படத்தில் நடிப்பதற்காக பூஜாவை அணுகியதாம். சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசியிருக்கிறது. ஆனால், தனது சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயைக் கூட குறைக்க மாட்டேன் என கறாரா பதிலளித்தாராம் பூஜா.
அதே நிறுவனம் அப்படத்தில் நடிப்பதற்காக ஒரு நடிகருக்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்குகிறதாம். அவருக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயமா என பொங்கிவிட்டாராம் பூஜா.




