கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் |

கடந்த சில தினங்களாகவே சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்திற்கு பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தனது டுவிட்டரில், ‛‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் இன்னும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் எனது நண்பரும், அமைச்சருமான அன்பில் பொய்யா மொழியிடம் இதற்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க சொல்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், சினிமாத்துறையை சார்ந்தவரான நீங்கள் அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சினிமாத்துறையில் உள்ள பெண்கள் உங்களிடம் உதவியை நாடியபோது நீங்கள் உங்கள் ஹீரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும். உங்களைப் போன்றோரின் அணுகுமுறைகளைப் பார்த்துதான் பெண்கள் உங்களை கண்டு ஓடுகிறார்கள். முதலில் யதார்த்தத்தை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.