ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கடந்த வருடம் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் முதன்முதலாக வெளியாக இருக்கும் நிழல் படம் தியேட்டர்களில் வரும் மார்ச்-4ல் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் நிவின்பாலியுடன் இணைந்து லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தில் நடித்த நயன்தாரா அதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் நிழல் என்கிற படத்தில் நடித்துள்ளார். .
குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை, ஒளிப்பதிவாளர் அப்பு என்.பட்டாத்திரி என்பவர் இயக்கி வருகிறார். கடந்த அக்-19ல் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை சுமார் 45 நாட்களிலேயே நடத்தி முடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கே இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விரும்புகிறார் என்றும் விரைவில் திரையரங்குகளில் நிலைமை சீராகி விடும் என்பதால் தான் மார்ச்-4ல் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.




