'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் அதிக படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் நடிகை லேனா.. தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த இவர், விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்திலும், பரபரப்பை கிளப்பிய திரௌபதி படத்திலும் கூட நடித்திருந்தார். .இந்தநிலையில் முழுக்க முழுக்க லண்டனில் உருவாகும் ஆங்கில படமான 'புட்பிரிண்ட்ஸ் ஆன் வாட்டர்' என்கிற படத்தில் நடித்துள்ளார் லேனா.
லண்டனில் வசிக்கும் நதாலியா சியாம் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்கள் முன்புவரை லண்டனில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தற்போது இந்தியா திரும்பியுள்ளார் லேனா. சொல்லப்போனால் பிரிட்டனில் கொரோனாவின் இரண்டவது அலை உருவானதாக கூறி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய லேனா, பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்காக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் லேனாவுக்கு கொரோனா பாசிடிவ் என செய்திகளை வெளியாகி உள்ளன. இதனை கண்டு பதறிப்போன லேனா, “இது வழக்கமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் சோதனை தான். லண்டனில் பிளைட் ஏறும் முன்பே கொரோனா நெகடிவ் என்கிற ரிப்போர்ட்டுடன் தான் கிளம்பினேன். தற்போது இங்கே ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். அதற்குள் சிலர் இப்படி தவறான செய்திகளை பரப்பிவிட்டார்கள்.. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம்... மேலும் பரப்பவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் லேனா.