14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் அறிமுக நடிகை இவானா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நாச்சியார். பாலாவின் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு அமைந்த இந்தப்படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
நாச்சியார் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட சுமார் ரூ.1 கோடி வரை பேசப்பட்டது. ஆனால் பாலாவே, படத்தை டப்பிங் செய்யாமல், ரீ-மேக் செய்யலாம் என்று கூறிவிட்டாராம். மேலும் இந்தப்படத்தில் அனுஷ்கா நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நாச்சியார் படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்யவும், அதில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.