அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மம்முட்டி நடித்து கடந்த 1990ல் மலையாளத்தில் வெளியான படம் சாம்ராஜ்யம். மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் இது என்று கூட சொல்லலாம். மம்முட்டி இதில் அலெக்சாண்டர் என்கிற தாதா கேரக்டரில் நடித்திருந்தார். ஜோமோன் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
குறிப்பாக கேரளாவை விட ஆந்திராவில் அதிக நாட்கள் ஓடி மம்முட்டிக்கு தெலுங்கில் ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்தது. இந்த நிலையில் தற்போது 35 வருடங்கள் கழித்து இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தை திரையிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் ‛சாம்ராஜ்யம் 2 ; சன் ஆப் அலெக்ஸாண்டர்' என்கிற பெயரில் நடிகர் உன்னி முகுந்தனை வைத்து இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.