வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் பாபு விஜய் தற்போது முதல்முறையாக இயக்கியுள்ள படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்திற்காக பாபு விஜய் அளித்த பேட்டியில், சர்கார் பட காலகட்டத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, "சர்கார் படம் உருவாகி வந்தபோது விஜய் சாருடன் நெருங்கி பழக சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் என்னை கதை சொல்ல வரச் சொன்னார். இரண்டரை மணி நேரம் கதை கேட்ட பிறகு 'இந்தக் கதையை நான் பண்ண முடியாது. என்னோட சம்பளம், வியாபாரம் எல்லாம் மாறிவிட்டது. அப்புறம் ஏன் வரச்சொல்லிக் கதை கேட்டீங்கன்னு நீ கேட்கலாம்? உன் கதைகளம் எப்படி இருக்குன்னு பார்க்க விரும்பினேன். நல்லா இருக்கு கதை. ஒரு படம் உருவாக்கிய பிறகு வா பார்க்கலாம் என்று கூறினார். அந்த மனசு தான் விஜய் சார்." என தெரிவித்துள்ளார்.