ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் கடந்த வருடம் நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தற்போது துணை முதல்வராகவும் இருந்து வருகிறார். தீவிர அரசுப் பணியில் இருந்ததால் அவர் நடித்து முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் காலதாமதம் ஆகின. அவற்றில் முதலில் 'ஹரிஹர வீரமல்லு' படத்தை முடித்துக் கொடுத்தார். அப்படம் இந்த வாரம் ஜூலை 24ம் தேதி வெளியாக உள்ளது.
அப்படத்திற்காக இன்று அவர் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார். கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சர்தார் கப்பார் சிங்' படத்திற்காக அவர் அப்படியான சந்திப்பில் கலந்து கொண்டார். அதற்கடுத்து நடித்த படங்களுக்காக அவர் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை.
பான் இந்தியா வெளியீடாக வெளியாக உள்ள இந்தப் படம் முகலாயர் காலம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது. இன்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பவன் பதில் அளிக்க உள்ளாராம். தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது மற்ற திரையுலகினரும் இந்த சந்திப்பு பற்றி எதிர்பார்த்துள்ளனர்.




