மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

‛கற்றது தமிழ்' ராம் இயக்கி உள்ள ‛பறந்து போ' பட பாடல் வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில் "அப்பா மகன் உறவை இந்த படம் பேசுகிறது. பல காட்சிகளில் அப்பாவாக நடித்த சிவாவும் அவர் மகனும் கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கருத்தை படக்கரு சொல்கிறது. என் அப்பா உயிரோடு இல்லை. அவர் என்னை கலெக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த காலத்தில் மதுரையில் அப்படிப்பட்ட வசதி இல்லை.
என்னால் கலெக்டர் ஆக முடியவில்லை. ஆனால் பேச்சாளர் ஆகிவிட்டேன். அதை கூட அவரால் பார்க்க முடியவில்லை. என் அப்பாவை படம் நினைவுபடுத்தியது. நம் குடும்பத்துடன், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டாம். உள்ளூரில் இருக்கும் நல்ல இடங்களுக்கு செல்லலாம் என்ற படக் கரு பாராட்ட பட வேண்டியது என்றார்.
அதேபோல் விழாவில் பேசிய இயக்குனர் கஸ்தூரிராஜாவும் என்னால் சூழ்நிலை, வேலை காரணமாக குடும்பத்துடன், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆனால் என் வாரிசுகள் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்கிறார்கள், அதை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றார்.
அஞ்சலி, பேசுகையில் ராம் சார் ஸ்டைலில் எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம் பறந்து போ, கற்றது தமிழ் ஆனந்தி மாதிரி இந்த படத்தில் வரும் மொக்க ஜோக் வனிதா கேரக்டர் பேசப்படும். இந்த படத்தில் ஹீரோயின் கிரேஸ் சூப்பராக நடித்துள்ளார். அவரை போனில் பாராட்டினேன் என்றார்.