அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
பி.டி.ஜி யுனிவர்சல் தற்போது புதிதாக தமிழில் ரெட்ட தல, சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த டிமான்டி காலனி 2ம் பாகத்தை இந்நிறுவனம் தான் கைப்பற்றி வெளியிட்டனர்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து இரண்டு படங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களை இயக்குவதற்காக ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், மற்றொரு படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் மற்றும் அறிமுக இயக்குனர் அருள் சக்தி முருகன் ஆகியோர் இயக்கவுள்ளார் என தகவல் வந்தது.
இந்த நிலையில் பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனம் ஜெயம் ரவியை வைத்து புதிய படங்களை தயாரிக்கின்றோம், மற்ற தகவல்கள் விரைவில் அறிவிப்பதாக அறிவித்துள்ளனர்.